ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரான முர்சியாவில் உள்ள இரவு விடுதிகளில் மூன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிறந்தநாளைக் கொண்டாட அங்கு கூடியிருந்த குடும்ப உறுப்பினர்களும் இறந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என்பதனால் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல்களை அடையாளம் காண கால அவகாசம் தேவை என்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேநேரம் கடந்த 1990 இல், ஸ்பெயினின் வடகிழக்கு நகரமான ஜராகோசாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.