சிகரெட் மற்றும் புகையிலை வாங்கும் இளைஞர்களின் வயது எல்லையை அதிகரிக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான வயது ஒரு வருடமாக அதிகரிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி 2040ஆம் ஆண்டுக்குள் இளைஞர் சமூகம் மத்தியில் புகைப்பிடிப்பதை விரைவில் நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைபிடிப்பதால் பக்கவாதம், இதய நோய், டிமென்ஷியா மற்றும் பிரசவம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் அதேநேரம் நான்கில் ஒருவர் புற்றுநோயால்மரணிப்பதாகவும் கூறப்படுகின்றது.
1970 களில் இருந்து புகைபிடிக்கும் விகிதம் குறைந்து வந்தாலும் இங்கிலாந்தில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானவர்களும் பிரித்தானியாவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
தற்போது, 18 முதல் 24 வயதுக்குட்பட்ட ஒன்பது பேரில் ஒருவர் புகைபிடிப்பதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆகவே எதிர்வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் புகைபிடிக்கத் தொடங்குவார்கள் என்பதனால் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமல் முன்னோக்கி செல்ல முடியாது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.