Belt and Road முயற்சியின் 10வது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு பயணிக்கவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி Xi Jinping உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
சீனாவிடமிருந்து கடன் நிவாரணத்தைப் பெறுவதில் இலங்கை சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும். இருதரப்புக் கடனை மறுசீரமைக்கும் பொறிமுறை குறித்து சீன ஜனாதிபதி Xi Jinping உடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது கடன் நிவாரணம் தொடர்பில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.