கட்சி மாறாமல் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பசறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும், மடூல்சிமைக்கு பஸ் கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லை என்றும் , மக்கள் அவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு , ஜனாதிபதியுடன் அவர் வெளிப்படையாக பேச விரும்புவதாகவும் , மக்களுக்கான செழிப்பான ஒரு சூழலை அமைத்து கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு மக்கள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
சிறுபான்மையினரின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் அந்த மக்களின் குறைபாடுகள், பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தானே பொறுப்பு கூற வேண்டும் என்றும் ஜனாதிபதியுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதே அவரின் கடமையும் பொறுப்பும்..” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.