இஸ்ரேல் அரசாங்கம் 300,000 க்கும் மேற்பட்ட வீரர்களை அணிதிரட்டியுள்ளதோடு தென்மேற்கு எல்லையில் உள்ள காசா பகுதியை முழுமையாக மூடியுள்ளது.
இந்நிலையில் காசா மீது தரை வழியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இஸ்ரேலியப் படைகள் வான் மற்றும் பீரங்கி மூலம் காசாவில் ஹமாஸ் அமைப்பின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடியாக கடந்த மூன்று நாட்களாக இடம்பெறும் தாக்குதல் நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600ஐத் தாண்டியது.
700 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள அதேநேரம் 50 வெளிநாட்டவர்கள் உட்பட 900 பேர் இஸ்ரேலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் 187,000 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.