”தங்கள் கட்சியின் கதவு எப்போதும் திறந்திருக்கின்றது என்றும், கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் வர விரும்பினால் மீண்டும் தங்களுடன் இணைந்துக்கொள்ளலாம்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பலர் பல கட்சிகளை அமைத்துக் கொண்டார்கள். இது அவர்களின் ஜனநாயக உரிமை.
அவர்கள் மீண்டும் நம் கட்சிக்கு வருவார்களா என்று தீர்மானித்ததன் பின்னர் அது பற்றி யோசிக்க முடியும். நம் கதவு எப்போதும் திறந்திருக்கின்றது யார் என்றாலும் வர முடியும். போகவும் முடியும். சென்றவர்கள் மீண்டும் வர நினைப்பார்களானால் வரலாம்.
45 வருடங்கள் எனது தந்தைக்கு எதிரியாக இருந்த ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க முடியுமானால் 45 வருடங்கள் எனது தந்தையுடன் இருந்தவர்களுடன் கலந்துரையாடுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
அத்தோடு தற்போது நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் விலை அதிகரிப்புகளை கவனத்தில் கொண்டு அரசாங்கத்துடன் கலந்துரையாடி கிராமிய மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். வரவு செலவு திட்டாத்திலும் இது தொடர்பாக கவனம் செலுத்தப்படும்” இவ்வாறு நாமல் தெரிவித்துள்ளார்