தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நேர அட்டவனையை பரீட்சைகள் திணைக்களத்தின் றறற.னழநநெவள.டம என்ற இணையத்தளத்தின் ஊடாக காண முடியும்.
பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டது.
அதன்படி, குறித்த பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் ஜனவரி 31 ஆம் திகதிவரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்கான மேலதிக வகுப்புகளை இன்று நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்குமெனவும் பரீட்சைகள் திணைக் களம் அறிவித்துள்ளது.
பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை மத்திய நிலையங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது