பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை, அத்தியாவசிய பொருட்கள் அல்லது மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிக்காது என இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் வீடு திரும்பும் வரை மின்சாரம், தண்ணீர், எரிபொருள் வாக்கங்கள் காசாவிற்குள் செல்லாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் நேற்று இரவு, ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, ஒரு பெண் கைதி மற்றும் இரண்டு குழந்தைகளை விடுவிப்பதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டது.
ஹமாஸை முழுமையாக ஒழிப்பதாக உறுதியளித்துள்ள இஸ்ரேல் காசா பகுதியில் முழு முற்றுகையை அறிவித்து தாக்குதல் நடத்தி வருகின்றது.