2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக கிளென் பிலிப்ஸ் 71 ஓட்டங்களையும் டாம் லாதம் 68 ஓட்டங்களையும் வில் ஜங் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அப்கானிஸ்தான் அணி சார்பாக அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.
இதனை தொடர்ந்து 289 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதனால் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து அணியின் க்ளென் பிலிப்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
நேற்றைய போட்டியின் முடிவை அடுத்து குழுநிலை போட்டிகளுக்கான புள்ளிபட்டியலில் நியூசிலாந்து அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று 8 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியா 6 புள்ளிகளோடும் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளோடும் இரண்டம மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளன.