இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள பொதுமக்களைப் பாதுகாக்க போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழப்பைத் தடுக்கவும், காசாவிற்கு மருந்துகள், உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீரை அணுக அனுமதிக்கவும் 40க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தனது மக்களைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயல்படவும் இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
ஹமாஸைப் போலல்லாமல், இஸ்ரேலிய ஆயுதப் படைகள் சர்வதேச சட்டத்தின்படி செயற்படுகின்றன என்றும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இஸ்ரேலை பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.