இஸ்ரேலுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தொடர்ந்தும் அந்நாட்டுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.
ஹமாஸ் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இரங்கல் தெரிவிக்கவும், காசாவில் போர் குறித்து விவாதிக்கவும் பிரிட்டிஷ் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
தனது இரண்டு நாள் பயணத்தின் போது, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கும் ரிஷி சுனக் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


















