இன்று பெங்களூரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான குழுநிலை போட்டியில் இந்தியா 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்தி முதலில் களமிறங்கியது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களை குவித்தது. அவ்வணி சார்பாக லிட்டன் தாஸ் 66 ஓட்டங்களையும் தன்சித் ஹசன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக பும்ரா, சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 257 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.
அவ்வணி சார்பாக விராட் கோலி அதிரடியாக ஆடி 103 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொடுத்தார். அத்தோடு சுப்மன் கில் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக மெஹிடி ஹசன் மிராஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.