‘கோ‘ திரைப்பட நாயகி கார்த்திகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ’கோ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார்.
இத்திரைப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த போதும் அதன் பின்னர் அவர் நடித்த அண்ணக்கொடியும் கொடி வீரனும்” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
பின்னர் விஜய் சேதுபதி நடித்த ’புறம்போக்கு என்ற பொதுவுடமை’ படத்திலும் ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் தனது நிச்சயதார்த்தத்தின் போது போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் தனது வருங்கால கணவர் யார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்பதெரிவிக்கவில்லை என்றாலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.