ஜக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாடு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது,
புதிய உலகை எதிர்கொண்டு எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் குறித்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை புதிய உலகிற்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்பதே இந்த விசேட பொது மாநாட்டின் பிரதான நோக்கம் எனவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.