பங்களாதேஷ் தலைநகரில் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்களை அடுத்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் அவரது கட்சி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிரும் ஒருவர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவுக்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வார இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து ஒரு பொலிஸ் அதிகாரியம் ஒரு போராட்டக்காரரும் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பங்களாதேஷின் தலைமை நீதிபதியின் வீட்டில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.