இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் மற்றும் இதர செலவுகளின் அதிகரிப்பு காரணமாக தற்போதைய கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என்பதால், கொடுப்பனவுகளை அதிகரிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக பிரிவுகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது என சுகாதார பரிசோதகர் சங்கம் கூறியுள்ளது.