சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர்களை சமர்ப்பிக்க முடியும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று (31) கோரப்படும் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த டெண்டர்களை வழங்குவதற்கு இன்று (31) முதல் நாற்பத்தைந்து நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் அதற்கான நிறுவனங்களை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்