இலங்கையின் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் சர்வதேச நாணய நிதியம் கடுமையாக இருக்க வேண்டும் என அதன் திறன் அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷர்மினி குரே தெரிவித்துள்ளார்.
குறைந்த வரி வருவாய் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்க தவறிய காரணத்தினால் இவ்வாறு கடுமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இலங்கைக்கு முன்வைக்கப்பட்ட 17 திட்டங்களில் கட்டமைப்பு சீர்திருத்தங்களிலேயே சர்வதேச நாணய நிதியம் மிகவும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள்
கடனை பெற்றுக்கொள்ளும் நாடுகளைப் பாதுகாப்பதில் சர்வதேச நாணய நிதியம் இன்னும் வலுவாக முன்னேற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை போன்ற நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு கடன் பேச்சுக்கள் முடிவடையும் வரை ஆரம்ப நிதியை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் ஷர்மினி குரே தெரிவித்துள்ளார்.
முதல் பரிசீலனைக்குப் பிறகும், இலங்கை அதன் கடன் வழங்குநர்களிடம் இருந்து கடன் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் ஷர்மினி குரே தெரிவித்துள்ளார்.