விசா இல்லாமால் இலங்கைக்குவர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இது எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தில் திருத்தங்களுடன் நவம்பர் 6 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளார்.
இந்தியா, ரஷ்யா, சீனா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விசா இல்லாத வருகை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கை தனது சுற்றுலாத் துறையை மேலும் புத்துயிர் பெறச் செய்யும் செயல்பாட்டில் இருப்பதால், இவ்வாறான ஒருங்கிணைந்த மற்றும் மூலோபாய அணுகுமுறை சாதகமான முடிவுகளைத் தரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.