வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளது.
மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் இதனை அறிவித்தார்.
கழுத்து மற்றும் முகத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே அவரது மரணம் பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நிபுணர் குழு குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.