நாட்டின் 78வது வரவு செலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று 12.00 மணிக்கு சமர்பிக்க உள்ளார்.
அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 7,326 பில்லியன் ரூபாயாகும். அதில் 5,334 பில்லியன் ரூபாய் மானியங்கள் மற்றும் சம்பளம் போன்ற செலவுகளுக்காக ஒதுக்கப்படும்.
புதிய திட்டங்கள் அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான செலவு 1,225 பில்லியன் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் 21 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறும் இதன் பின்னர் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21ஆம் திகதி நடைபெறும்.