இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை பாதியாகக் குறைக்க அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில் வரிகளைக் குறைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக, தற்போது 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள வரிச்சுமையைக் குறைக்குமாறு கட்சியில் உள்ள பலரது அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு லண்டனில் தனது பொருளாதாரத் திட்டங்கள் குறித்து உரை நிகழ்த்திய சுனக், பணவீக்கம் மற்றும் கடனைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே வரிகளைக் குறைக்க முடியும் என கூறினார்.