பன்னிபிட்டிய மாம்புல்கொட பிரதேசத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் கடையின் உரிமையாளரை தாக்கியதில், சம்பவத்தை சமரசம் செய்ய வந்த அயலவர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.