அசாமின் நாகோன் மாவட்டத்தில் இன்று (06) அதிகாலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி அதிகாலை 4:23: மணிக்கு 33 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் வடக்கு அட்சரேகை 26.428 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 93.060 ஆகிய இடங்களில் அமைந்திருந்தது.
சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னமும் தெரியவில்லை.
இதற்கு முன்னதாக, ஒக்டோபர் 5 அன்று இரவு, இமாச்சலப் பிரதேசத்தின் உனா (Una) பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 2.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

















