இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆரோக்கியமான இளைஞர்கள் திடீரென உயிரிழப்பும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதனையடுத்து, ஆரோக்கியமான இளைஞர்கள் இடையே விவரிக்கப்படாத மரணங்களுக்கு பங்களிக்கும் காரணிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் இறுதியில் கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்றும் பரம்பரை நோய், வாழ்க்கை முறை மாற்றம், மது உள்ளிட்ட பழக்க வழக்கங்களே காரணம் என தெரிவித்துள்ளது.