தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரேசிலின் சில நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வெப்பநிலை 44.8 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாகவும், இது அந்நாட்டின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை கடந்த 2005-ம் ஆண்டு 44.7 டிகிரி செல்சியஸில் பதிவானது.
கடும் வெப்பம் காரணமாக சமீபத்தில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற இருந்த சூப்பர் பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. 23 வயது ரசிகையான அன்னா கிளாரா வெப்ப பக்கவாதத்தால் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததால், கச்சேரி தொடங்குவதற்கு சற்று முன்பு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.