அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று அனைத்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் உட்பட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20,000 ரூபாய் சம்பள உயர்வு, ஜனவரி முதல் உயர்த்தப்பட்ட கொடுப்பனவு 2016 முதல் இழந்த ஓய்வூதிய உரிமையை மீட்டெடுப்பது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெறுகின்றது.
அதன்படி, இன்று நண்பகல் 12 மணிக்கு அரச நிறுவனங்களுக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம் இடம்பெறும் என்றும் பத்தரமுல்லை செத்சிரிபாயவுக்கு முன்பாகவும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாடு நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வேளையில் அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்களை ஏற்பாடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.