பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு சென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் சாலை வழியாக திருமலை சென்றடைந்த பிரதமர், ரச்சனா விருந்தினர் மாளிகைக்கு சென்றபோது, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.வி.தர்ம ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலையில் தங்கிய நரேந்திர மோடி, இன்று காலை உலகப் புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் வெங்கடேசப் பெருமானுக்கு தரிசனம் செய்தார்.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி திருமலை கோயிலுக்குச் செல்வது இது நான்காவது முறையாகும்.
இதற்கிடையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு திருமலை மற்றும் திருப்பதி ஆகிய இரண்டு யாத்ரீக நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் பலபப்படுத்தப்பட்டுள்ளன.