டிசம்பர் மாதம் எட்டாம் திகதி நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை பார்கிலும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் சிறந்தது.
வரவு செலவு திட்டம் என்பது எதிர்காலத்தின் வருமானம் மற்றும் காணப்படும் வளங்களை பயன்படுத்தி எவ்வாறு வருமானத்தை ஈட்டுவது போன்றவற்றை அடிப்படையாக கொண்டது.
ஆதனை இந்த வரவு செலவு திட்டத்தில் காண முடிகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இதை விட சிறப்பாக செயற்படுவது நல்லது ஆனாலும் முடியாத பட்சத்தில் இதனை பெற்றுக்கொடுப்பது மதிப்பளிக்கக்கூடியது.
டிசம்பர் எட்டாம் திகதி நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீளும். அதனை நேக்கிய பயணத்தை தான் காணக்கூடியதாக இருக்கின்றது.
நாட்டின் வங்குநோரத்து நிலையை இல்லாதொழித்து முன்னோக்கி செல்ல வேண்டியது அவசியம்.
வங்குரோத்தி நிலையை அறிவிப்பது ஒரு பகுதி அதனை சரிசெய்து அதிலிருந்து மீட்டெடுப்பது இன்னொரு பகுதி.
இவை எல்லாவற்றிலும் மக்களே பாதிக்கப்படுவார்கள் ஆகவேதான் மக்கள் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு அதனை இலகுபடுத்தி செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.