நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 04ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரீக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டமூலங்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 3ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 04ம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.