போர் நிறுத்தத்திற்கு நடுவே காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கா மூன்று இராணுவ விமானங்களை எகிப்துக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது.
தமது கட்சியினரின் அழுத்தத்திற்கு மத்தியில் பாலஸ்தீனிய குடிமக்களுக்கான உதவியை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி பைடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விமானங்கள் குளிர்கால உடைகள், உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் என்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன்படி முதல் விமானம் இன்று வடக்கு சினாயில் தரையிறங்கும் என்றும் மற்ற இரண்டு இராணுவ விமானங்களும் வரும் நாட்களில் எகிப்தை சென்றடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.