எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, முதல் தொடராக சிம்பாப்வே அணி, ஜனவரி மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இலங்கையில் நடைபெறவுள்ள மற்றொரு தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் இலங்கை அணி, விளையாடவுள்ளது.
இதனையடுத்து பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி மூன்று வகை போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன்பிறகு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கின்றது.
இந்தியா, நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி விளையாடுகிறது.
தொடர்ந்து தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, இறுதியாக நியூஸிலாந்து தொடருடன் 2024ஆம் ஆண்டுக்கான தொடரை நிறைவு செய்கின்றது.