வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய 130 கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று மாலை பாதுகாப்பு வேலியை உடைத்து 50 கைதிகள் தப்பிஓடியதையடுத்து அவர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு 7 மணியளவில் 80 பேர் மீண்டும் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடிய நிலையில் இரவு இரவாக இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தப்பி ஓடிய 130 பேரையும் கைது செய்துள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் கட்டுபாடுகள் அதிகம் எனவே இங்கு இருக்கமுடியாது தங்களை சிறைச்சாலையில் அடைக்குமாறு கோரியே அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்ததாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.