“வட் (VAT) வரி அதிகரிப்புக் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் பேருந்துக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம்” என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கையில்” நாட்டில் உதிரி பாகங்களின் விலை, எண்ணெய் விலை, சேவைக் கட்டணங்கள் அனைத்தும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 18% VAT வரி அதிகரிப்பால் பேருந்தின் இறக்குமதிக்கு சுமார் 1 கோடியே 77 இலட்சம் வரை அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமல்லாது VAT வரி அதிகரிப்பினால் டீசல் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் பேருந்துக் கட்டணமும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே விரைவில் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசிக்க எதிர்பார்த்துள்ளேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.