நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மாத்தளை, குருநாகல், கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் பதுளை ஆகிய மாட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நுவரெலியா – மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கமாறு குறித்த நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பல வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளிலை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.