“200 இல் மலையகம், மாற்றத்தை நோக்கி” எனும் தொனிப்பொருளில் மலையக தியாகிகளை நினைவுகூர்ந்து நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஆதவன் செய்தி பிரிவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார்.
அத்துடன், இந்திய துணை உயர்ஸ்தானிகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மனோ கணேஷன், வேலுகுமார், தௌபீக், ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மலைய சமூக மேம்பாட்டிற்காக ஊடகத்துறையில் ஆதவன் செய்தி பிரிவு ஆற்றிய சேவைக்காக இந்த விருதினை ஆதவன் செய்தி பிரிவின் உதவி செய்தி முகாமையாளர் ஜெயச்சந்திரன் விதுஷன் பெற்றுக்கொண்டார்.
ஆதவன் தொலைக்காட்சி மற்றும் ஆதவன் செய்திகளின் முகாமைத்துவத்தின் வழிகாட்டுதலில் ஆதவன் செய்தி பிரிவு வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் புலம்பெயர் மக்களுக்கான செய்திகளை வெளியிட்டு வருகிறது.
இதேவேளை, எமது ஊடக வலைமைப்பின் மற்றுமொரு வானொலியான தமிழ் எப்.எம்.க்கும் மலைய சமூக மேம்பாட்டிற்காக ஊடகத்துறையில் ஆற்றிய சேவைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழ் எவ் எம் சார்பில் அதன் உதவி செய்தி முகாமையாளர் யோகராஜ் தர்மராஜ் விருதினைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மலையகத்தில் பல சாதனைகளை நிலைநாட்டிய கல்விமான்கள், மருத்துவர்கள், விளையாட்டுத் துறையில் மலையகத்திற்கு பெருமை சேர்த்தவர்கள் மற்றும் சாதனையாளர்கள் பலருக்கும் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.