அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
அதன்படி இன்றைய நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கும் அவுஸ்ரேலியா அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
அதன்படி தனது முதலாவது இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக உஸ்மன் கவாஜா 42 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 38 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் ஓட்டங்களையும் மார்னஸ் லாபுசாக்னே 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அமீர் ஜமால் 3 விக்கெட்களையும் ஹசன் அலி, மிர் ஹம்சா, ஆகா சல்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து இரண்டாம் நாளான இன்று தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்கள் இழப்பிற்கு 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அவ்வணி சார்பாக அப்துல்லா ஷபிக் 62 ஓட்டங்களையும் ஷான் மசூத் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக பட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் 2 விக்கெட்களையும் ஜோஷ் ஹசில்வுட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்நிலையில் 124 ஓட்டங்கள் பின்னிலையொடு நாளை ஆட்டத்தின் 3 ஆம் நாளை பாகிஸ்தான் அணி தொடரவுள்ளது.