நாடளாவிய ரீதியில் 22 பாடசாலைகளுக்கு பந்துவீச்சு இயந்திரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கி வைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, குறித்த பந்துவீச்சு இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், றோயல் கல்லூரி – டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி – லும்பினி கல்லூரி – மொரட்டுவ வித்தியாலயம், – இசிபதன கல்லூரி – தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய – டி மஸெனோட் கல்லூரி, கந்தானை – புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை – குருகுல கல்லூரி, களனி – புனித ஜோசப்வாஸ் கல்லூரி, வென்னப்புவ – புனித செபஸ்தியன்ஸ். கல்லூரி, கட்டுனேரிய – ரத்னாவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா – மலியதேவ கல்லூரி, மற்றும் குருநாகல் புனித அன்னாள் கல்லூரி, சென். அந்தோனி கல்லூரி – தர்மராஜா கல்லூரி மற்றும் கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி, சென்.. தோமஸ் கல்லூரி, மாத்தறை – தேவபதிராஜா கல்லூரி, ரத்கம – தர்மசோகா கல்லூரி, அம்பலாங்கொடை புனித அலோசியஸ் கல்லூரி, காலி மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி, களுத்துறை ஆகிய பாடசாலைகள் பந்துவீச்சு இயந்திரங்களைப் பெற்றுக்கொண்டன.
28 பந்துகள் கொண்ட ஆட்டோ ஃபீடர், 36 பயிற்சி பந்துகள், பயிற்சி பந்து பை ஆகியவற்றைக் கொண்ட பந்துவீச்சு இயந்திரங்களும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன.
தலைவர் ஷம்மி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன செயற்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை தேசிய பாதை திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பந்துவீச்சு இயந்திரங்களைத் தவிர, இலங்கை கிரிக்கெட், இந்த திட்டத்தின் கீழ், கிரிக்கெட் பொருட்கள், மேட்டிங் மற்றும் கான்கிரீட் விக்கெட்டுகள், மற்றும் சென்டர்-டர்ஃப் விக்கெட்டுகள், அத்துடன் 13, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தேவையான பந்துகளையும் வழங்குகிறது.
இதனிடையே, இந்த விழாவில் நான்கு மாவட்ட சங்கங்களுக்கும் பந்துவீச்சு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.