தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘என் மண், என் மக்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை கடந்த 8ஆம் திகதி தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிப்பட்டியில் உள்ள லூர்து அன்னை மாதா ஆலயத்திற்கு வழிபட சென்ற போது இளைஞர்களால் எதிர்பு தெரிவிக்கப்பட்டது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பட்ட போது , அது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பதிலளித்திருந்தார்.
தொடர்ந்தும் ஆலயத்திற்குள் செல்ல கூடாது என வாக்குவாதத்தில் இளைஞர்கள் ஈடுபடவே பொலிஸாரின் தலையீட்டின் பின்னர் அண்ணாமலை வழிப்பாட்டில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் , பொது அமைதிக்கு இடையூறு விளைவித்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பொம்மிடி பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொம்மிடி பொலிஸ் நிலையத்தில் கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.