ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்நோ
ஹனுமன் ப்ரசோதயாத்
ஸ்ரீ ராமன் பெயர் சொல்லும் இடம் எல்லாம் சிரஞ்சீவி இருப்பார் என்பது ஐதீகம். மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நன்னாளாகும். இத்தினம் அனுமன் ஜெயந்தி என அழைக்கப்படும் இன்னாளாகும்.
அனுமனை திருமாலின் சிறிய திருவடி என அழைப்பதுண்டு. இந்தியாவின் கேரளா மற்றும் வட மாநிலங்களில் பெரும்பாலும் இன்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆஞ்சநேய கோவில்களிலும் , வைணவக்கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி அனஷ்ட்டிக்கப்படுகிறது.
வீரம் , ஆரோக்கியம், உடல் வலிமை , அறிவு , புகழ் , சாதூர்யம் என அனைத்தலும் சிறந்து விளங்கும் இவருக்கு சீதா தேவி சிரஞ்சீவி என பெயரிட்டார். சமஸ்கிருதத்தில் ஹனு என்றால் தாடை என்றும், மன் என்றால் பெரிய என்றம் பொருள்படும். ஆகவே , பெரிய தாடையை உடையவர் என்பதே இவரின் பெயருக்கு பொருள்.
நினைத்ததை நிறைவேற்றும் அனுமனுக்கு இன்று உபவாசமிருந்து , ஆலயத்திற்கு சென்ற அனுமன் காயத்ரி ஜெபித்து, முடிந்தவர்கள் வடைமாலை சாத்தி வழிபடுவது சிறப்பு.