மாலைத்தீவின் ஜனாதிபதி முகமது மூயிஸ் சீனாவுக்கு 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பின்னர் , சீனா-மாலைத்தீவுக்கு இடையே சுற்றுலா, பேரிடர் மேலாண்மை, கடல்சார் பொருளாதாரம், வர்த்தக வழித்தடம் உற்பட பல்வேறு துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகம் தனது என்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்ச்சத்தீவுக்கு விஜயம் செய்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைத்தீவின் அமைச்சர்கள் மூவர் விமர்சித்திருந்ததையடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
சுற்றுலாவை பெரிதும் நம்பியிருக்கும் மாலைத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இதன் பின்னர் விரிசல் ஏற்ப்பட்டதையடுத்து மாலைத்தீவு ஜனாதிபதி சீனாவுடன் 20 ஒப்பந்தங்களில் சுற்றுலா துறையை விருத்தியடைய செய்வதை நோக்கமாக கொண்டு கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.