இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் அண்மையில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் படையினரால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 100 ஆவது நாளைக் குறிக்கும் வகையிலேயே குறித்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட குறித்த பேரணியில் இஸ்ரேலியக் கொடிகளை ஏந்திய வண்ணம் பேரணில் ஈடுபட்ட மக்கள்,காஸாவுக்குப் பணயக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை குறித்த பேரணியில் பயணக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் சுமார் 132 பேரின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.