தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல வகையான உரங்களின் விலையை 2000 ரூபாவினால் குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
இதன்படி T-750, T-709 மற்றும் T-200 ஆகிய உர வகைகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகைகளின் விலை தற்போதுள்ள விற்பனை விலையில் இருந்து 50% குறைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி T-750, T-709, உர மூட்டைகள் 7735 ரூபாவாகவும், T-200 உர மூட்டைகள் 5500 ரூபாவாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை பயிர்ச்செய்கைக்கு இந்த உர மானியம் வழங்கப்படுவதுடன், பாரிய தேயிலை செய்கை நிறுவனங்களுக்கு மேற்படி வகை உரங்களை 9935 ரூபாவிற்கு வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.