சீனாவில் இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 2 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்தது.
இந்நிலையில் சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்களே உள்ளனர் என தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் ஆரம்ப காலங்களில் மக்கள் தொகையைக் குறைக்க ‘ஒரு குழந்தை திட்டம்‘ நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் குறித்த திட்டத்தை சீன அரசு தளர்த்தியது.
இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. மாறாக இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.