நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அனுமதி வழங்கியதன் முக்கியத்துவத்தையும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் இந்த அனுமதி, இலங்கை பின்பற்றிய முக்கியமான மறுசீரமைப்புகளுக்கான அங்கீகாரம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.