2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாத்திரம், நாட்டில் வாழும் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் பூர்த்தி செய்வதற்கு 16 ஆயிரத்து 302 ரூபா தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொகை கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 16 ஆயிரத்து 112 ரூபாவாகப் பதிவாகியுள்ளதுடன் மாவட்ட ரீதியில் கொழும்பில் வசிக்கும் ஒருவர், ஒரு மாதத்தில் தமது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது
மேலும் நாட்டின் 25 மாவட்டங்களில் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறைந்த செலவு கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














