இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது.
இதில் முதலாவதாக ஒரேயொரு டெஸ்ட் போட்டி, எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு- எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி, எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்பு-ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகின்றது.
இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், தம்புள்ளை- ரன்கிரி மைதானத்தில் நடைபெறுகின்றது. இதில் முதல் போட்டி, பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறுகின்றது.