அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகள் நீக்கப்பட்டமைக்கு மத்திய நிதி அமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டமை தமிழகத்தில் அடக்குமுறை தொடர்வதற்கு சான்று என்றும் தி.மு.க. அரசாங்கம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்து விரோத திமுக அரசாங்கம் தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்ட எல்.இ.டி. திரையை பொலிஸார் அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.