யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 தமிழக கடற்தொழிலாளர்கள் எதிராகவும் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முற்படுத்தப்பட்டனர்
அதன் போது 12 தமிழக கடற்தொழிலாளர்களும் தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , தலா ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 5 வருடங்களுக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
அத்துடன் குறித்த கடற்தொழிலாளர்களின் 03 படகுகள் கைப்பற்றப்பட்டு இருந்த நிலையில் , அதில் ஒரு படகின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு இருந்தமையால் , அவரின் படகை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான் , ஏனைய இரு படகின் உரிமையாளர்களையும் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டு , வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.