இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் 26 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது பாதைகளில் வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணாதது பல விபத்துக்களை ஏற்படுத்துவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள பல தெருவிளக்குகள் மற்றும் நெடுஞ்சாலை மாற்றுப்பாதைகள் செயலிழந்து அப்பகுதிகள் இருள் சூழ்ந்துள்ளமையும் விசாரணையின் போது அவதானிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இரகசியமான முறையில் மின்சார கம்பிகளை அறுத்து இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.